ADDED : ஜூலை 07, 2024 03:13 AM
தங்கவயல்: 'தங்கவயலில் இன்றும், வரும் 9ம் தேதியும் மின் தடை செய்யப்படுகிறது' என, பெஸ்காம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து உதவி செயல் பொறியாளர் ஹேமலதா கூறியதாவது:
பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலையில் மின் இணைப்பு வழங்கும் பணிகள் கம்மசந்திரா அருகே நடக்க உள்ளது. இதனால் ஆண்டர்சன்பேட்டை, மஸ்கம், கவுதம் நகர், சல்டானா, ராபர்ட்சன் பேட்டை, விவேக் நகர், சொர்ணா நகர், அடம் பள்ளி ஆகிய இடங்களில் இன்றும், நாளை மறுநாள் 9ம் தேதியும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.