கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு பெஸ்காம் காலக்கெடு விதிப்பு
கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு பெஸ்காம் காலக்கெடு விதிப்பு
கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு பெஸ்காம் காலக்கெடு விதிப்பு
ADDED : ஜூலை 07, 2024 03:12 AM
பெங்களூரு: 'பெஸ்காமின் மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஓ.எப்.சி., எனும் கண்ணாடி இழை வடங்கள், கேபிள் 'டிவி' ஒயர்களை, வரும் 8ம் தேதிக்குள் அகற்றிவிட வேண்டும்' என, இணையதளம் சேவை நிறுவனங்கள், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு பெஸ்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் இணையதளம் சேவை நிறுவனங்கள், கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், முறைகேடாக, பெஸ்காமின் மின் கம்பங்கள் மீது ஓ.எப்.சி., டேட்டா கேபிள்கள், கேபிள் டிவி ஒயர்களை பொருத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, நேற்று பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2023ல் மின்கம்பங்களில் முறைகேடாக பொருத்தப்பட்டிருந்த கேபிள்களை அகற்ற, ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருந்தும், யாரும் அகற்றவில்லை.
இனிமேல், பெஸ்காம் மின்கம்பங்களில் ஒயர்கள் பொருத்தப்பட்டிருந்தால், ஜூலை 8ம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்களே அப்புறப்படுத்த வேண்டும்.
இல்லையெனில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கேபிள் ஒயர்கள் அகற்றப்படும். சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.