Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'நீட்' தேர்வு மோசடி வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவக்கம்: 'சால்வர் கேங்' கும்பல் தலைவன் எங்கே?

'நீட்' தேர்வு மோசடி வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவக்கம்: 'சால்வர் கேங்' கும்பல் தலைவன் எங்கே?

'நீட்' தேர்வு மோசடி வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவக்கம்: 'சால்வர் கேங்' கும்பல் தலைவன் எங்கே?

'நீட்' தேர்வு மோசடி வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவக்கம்: 'சால்வர் கேங்' கும்பல் தலைவன் எங்கே?

ADDED : ஜூன் 24, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை துவங்கியுள்ளது.

இந்த மோசடிக்கு காரணமாக கூறப்படும், 'சால்வர் கேங்' கும்பல் தலைவனை கைது செய்யும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் இறங்கியுள்ளனர். நீட் தேர்வில் நடந்துள்ள மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள், தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

முறைகேடு


பீஹாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கடைசி நேரத்தில் நேற்று நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, தன் விசாரணையை சி.பி.ஐ., நேற்று துவக்கியுள்ளது. இதைத் தவிர, யு.ஜி.சி., நெட் எனப்படும் ஆசிரியர் தேர்வு தொடர்பான முறைகேடுகள் குறித்தும் சி.பி.ஐ., விசாரிக்க உள்ளது.

இந்நிலையில், பல நுழைவுத் தேர்வுகளில் மோசடிகளில் ஈடுபட்ட நிபுணத்துவம் உள்ள, 'சால்வர் கேங்' எனப்படும் தீர்வு அளிக்கும் கும்பல் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த கும்பல், பல நுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை கசிய விட்டது, ஒருவருக்குப் பதில் ஆள் மாறாட்டம் செய்து மற்றவர்களை தேர்வு எழுத வைப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்துள்ளது.

இந்தக் கும்பல், நீட் தேர்வு மோசடியின் பின்னணியிலும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கும்பலின் முக்கிய புள்ளியான ரவி ஆட்ரி, பல நுழைவுத் தேர்வு மோசடிகளில் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார். இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கும்பலின் தலைவனாகக் கருதப்படுபவர், பீஹாரைச் சேர்ந்த சஞ்சீவ் முக்கியா. இவரும், இவருடைய குடும்பமும் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

வினாத்தாள்களை முன்னதாகவே பெற்று, தேர்வுக்கு முதல் நாளில், தேர்வு எழுதுவோருக்கு அதிக பணத்துக்கு விற்று வந்துள்ளார். இதற்காக, நாடு முழுதும் ஆட்களை அவர் நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல்


தற்போது, சஞ்சீவ் முக்கியா, அண்டை நாடான நேபாளத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை பிடிப்பதற்காக பீஹார் போலீசாரும், சி.பி.ஐ., அதிகாரிகளும் விரைவில் நேபாளம் செல்லவுள்ளனர்.

இதற்கிடையே பீஹாரின் நவாடா மாவட்டத்தில் நீட் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சி.பி.ஐ., அதிகாரிகளை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

ஆசிரியர்களிடம் விசாரணை!

நீட் தேர்வு மோசடி தொடர்பாக, மஹாராஷ்டிரா போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்த தேர்வில் வினாத்தாள் கசியவிட்ட மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆசிரியர்கள் இருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சஞ்சய் துக்காராம் ஜாதவ் மற்றும் ஜலீல் உமர்கான் பதான் ஆகியோர், தனியார் பயிற்சி மையங்களையும் நடத்தி வந்துள்ளனர்.இவர்களிடம், போலீசார் நேற்று முன்தினம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us