சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல்: 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல்: 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல்: 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
UPDATED : ஜூலை 18, 2024 12:10 PM
ADDED : ஜூலை 18, 2024 11:05 AM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் மறைத்து வைத்திருந்த ஐ.இ.டி.,வகை வெடிகுண்டு வெடித்து 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வனப்பகுதியில், நக்சலைட்கள் மறைத்து வைத்திருந்த ஐ.இ.டி.,வகை வெடிகுண்டு வெடித்தது.
இதில் பாரத் லால் சாஹு, சதர் சிங் ஆகிய இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புருஷோத்தம் நாக், கோமல் யாதவ், சியாராம் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய 4 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.