பீஹாரில் தொடர்ந்து இடியும் பாலங்கள்: ஒரே மாதத்தில் 15வது சம்பவம்
பீஹாரில் தொடர்ந்து இடியும் பாலங்கள்: ஒரே மாதத்தில் 15வது சம்பவம்
பீஹாரில் தொடர்ந்து இடியும் பாலங்கள்: ஒரே மாதத்தில் 15வது சம்பவம்
ADDED : ஜூலை 18, 2024 10:59 AM

பாட்னா: பீஹாரில் அராரியா மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. பீஹாரில் ஒரு மாதத்தில் இதுவரை 15 பாலங்கள் இடிந்துள்ளன.
பீஹார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடைபெற்றன. பாலம் இடிந்து விழும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதையடுத்து பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். அங்கு கனமழை பெய்ததால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து பாலத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பல பாலங்கள் இடிந்து விழுந்தன.
தற்போது மற்றொரு பாலமும் சேதமடைந்தது. அராரியா மாவட்டத்தில் அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றை கடப்பதற்காக பொதுப்பணித் துறையால் 2008ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பாலம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பாலம் ஏற்கனவே 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2021ல் பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது மீண்டும் இடிந்து விழுந்தது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பீஹாரில் இடிந்து விழும் 15வது பாலம் இதுவாகும். அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 இன்ஜினியர்களை மாநில அரசு சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகிறது.