தமிழ்நாடு தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழ்நாடு தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
UPDATED : ஜூலை 18, 2024 12:23 PM
ADDED : ஜூலை 18, 2024 11:30 AM

சென்னை: தமிழ்நாடு தினம் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு என பெயர் சூட்டிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சட்டசபையில் பேசிய வீடியோவை எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு வாழ்க
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் கூறியிருப்பதாவது: கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க.
ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.