ADDED : ஜூன் 19, 2024 01:11 AM

இது பிரசாதம் இல்லை!
விவசாயிகளுக்கான நிதியுதவியை விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டதாக செய்தி வெளியானது. தற்போது மீண்டும் அவர் நிதியுதவியை விடுவித்ததாக அரசு செய்தி வெளியிடுகிறது. நிதியுதவி ஒன்றும் பிரசாதமில்லை.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச் செயலர்,
காங்கிரஸ்
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மே.வங்கத்தில், தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையின் போது, திரிணமுல் காங்கிரசார், பெண்களை பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால், அவர்கள் மீது முதல்வர் மம்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரும் ஒரு பெண் தானே. சக பெண்களின் துயரத்தை, அவர் புறக்கணிப்பது ஏன்?
ரவி சங்கர் பிரசாத்
லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,
வயநாட்டில் மீண்டும் போட்டி?
ரேபரேலியில் வெற்றி பெற்ற பின், ராகுல் வயநாட்டை கைகழுவி விட்டார். விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் மீண்டும் வயநாட்டில் போட்டியிடுவேனா என்பதை கட்சி தான் முடிவு செய்யும்.
ஆனி ராஜா
மூத்த தலைவர்,
இந்திய கம்யூனிஸ்ட்