Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நான்சி பெலோசி - தலாய்லாமா சந்திப்பு : சீனா கடும் எதிர்ப்பு

நான்சி பெலோசி - தலாய்லாமா சந்திப்பு : சீனா கடும் எதிர்ப்பு

நான்சி பெலோசி - தலாய்லாமா சந்திப்பு : சீனா கடும் எதிர்ப்பு

நான்சி பெலோசி - தலாய்லாமா சந்திப்பு : சீனா கடும் எதிர்ப்பு

UPDATED : ஜூன் 19, 2024 01:17 AMADDED : ஜூன் 19, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
தர்மசாலா: அமெரிக்கா பார்லிமென்ட் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் திபெத் வருகைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி, பெலோசி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் இந்தியாவின் தர்மசாலாவிற்கு வருகை தர உள்ளனர்.

அங்கு திபெத் மதகுரு தலாய்லாமாவை சந்தித்து பேசுகின்றனர். இதற்கு சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வயது முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக தலாய்லாமா அமெரிக்க செல்லஉள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நான்சி பெலோசி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினரின் நேற்று இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசம் வந்திறங்கனர். அக்குழுவினர் தலாய்லாமாவை சந்தித்து பேசுகின்றனர்.

முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி பலத்த பாதுகாப்புபடையினர் ஆதரவுடன் தைவான் சென்று அந்நாட்டு தலைவர்களை நான்சி பெலோசி, சந்தித்தார்.

இன்று தலாய்லாமாவை நான்சி பெலோசி சந்திக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us