ADDED : ஜூன் 12, 2024 01:05 AM

அழுத்தம் தர வேண்டும்!
தற்போதைய மத்திய அரசில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் அதிகம் இடம் பெற்றுள்ளனர். முதல்வர் நிதீஷ் குமார் தன் செல்வாக்கை பயன்படுத்தி மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
தேஜஸ்வி யாதவ்
தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
வாரிசுகளின் அமைச்சரவை!
பிரதமர் மோடியின் சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் இருக்கிறது. வாரிசு அரசியலை விமர்சித்து வந்த அவரது அமைச்சரவையில், வாரிசுகளான குமாரசாமி, ஜோதிராதித்ய சிந்தியா, ஜெயந்த் சவுத்ரி, சிராக் பஸ்வான் உள்ளிட்ட 20 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
வார இறுதியை எண்ணாதீர்!
வார இறுதி நாட்கள் என்ற யோசனை மேற்கத்திய நாடுகளின் மூளைச்சலவை. நாம் இன்னும் வளர்ந்த நாடாக மாறவில்லை. நாம் வெட்டியாகவோ, சோம்பேறிகளாகவோ இருக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்காக கடும் உழைப்பை கொடுக்க வேண்டும்.
கங்கனா ரணாவத்
லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,