/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ரூ.300 மதிப்புள்ள கவரிங் நகையை ரூ.6 கோடிக்கு வாங்கி ஏமாந்த பெண் ரூ.300 மதிப்புள்ள கவரிங் நகையை ரூ.6 கோடிக்கு வாங்கி ஏமாந்த பெண்
ரூ.300 மதிப்புள்ள கவரிங் நகையை ரூ.6 கோடிக்கு வாங்கி ஏமாந்த பெண்
ரூ.300 மதிப்புள்ள கவரிங் நகையை ரூ.6 கோடிக்கு வாங்கி ஏமாந்த பெண்
ரூ.300 மதிப்புள்ள கவரிங் நகையை ரூ.6 கோடிக்கு வாங்கி ஏமாந்த பெண்
ADDED : ஜூன் 12, 2024 12:48 AM

ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹ்ரி பஜார் என்ற இடத்தில் நகை வியாபாரம் செய்து வருபவர் கவுரவ் சோனி. இவர், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் தன்னிடம் பல அரிய டிசைன்களில் விலை உயர்ந்த தங்க நகைகள் இருப்பதாக, 'வீடியோ' வெளியிட்டார்.
இதை பார்த்த அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண், 2022ல் கவுரவ் சோனியை தொடர்பு கொண்டார். அவர் காட்டிய பல அட்டகாசமான டிசைன்களை கண்டு ஆச்சரியப்பட்ட செரிஷ், 6 கோடி ரூபாய் கொடுத்து, கவுரவிடம் இருந்து நகைகளை வாங்கியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நகை கண்காட்சியில், அந்த நகைகளை காட்சிக்கு வைத்தார். அப்போது தான் அவை போலியான நகைகள் என்பது தெரியவந்தது. 300 ரூபாய் மதிப்பிலான கவரிங் நகைகள் மீது தங்க முலாம் பூசி, அதை 6 கோடி ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த செரிஷ், ஜெய்ப்பூர் புறப்பட்டு வந்தார். கவுரவ் சோனியை சந்தித்து முறையிட்டார். குற்றச்சாட்டை கவுரவ் மறுத்தார்.
இதை தொடர்ந்து, அமெரிக்க துாதரகத்தில் புகார் அளித்தார். துாதரக அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உஷாரான கவுரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனி தலைமறைவாகினர். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.