ADDED : ஜூன் 02, 2024 01:35 AM

சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா?
பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக, கன்னியாகுமரியின் விவேகானந்தர் நினைவிடத்துக்கு சென்றார். புனித இடமான அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. மோடி மட்டும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா?
திக்விஜய் சிங்
மூத்த தலைவர்,
காங்கிரஸ்
நாங்கள் மோடி படையினர்!
ஹிமாச்சல பிரதேசத்தில் முழுக்க மோடி அலை வீசுகிறது. இங்கு போட்டியிட்ட அனைத்து தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றும். நாங்கள் மோடியின் படைவீரர்கள். 400 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
கங்கனா ரனாவத்
ஹிமாச்சல் பா.ஜ., வேட்பாளர்
140 தொகுதிகள் தான்!
பா.ஜ., இந்த முறை 140 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்பது தான் உண்மை. விலைவாசி, வறுமை, வேலையின்மையை அதிகரித்த பா.ஜ.,வை மக்கள் தண்டிப்பர். 'இண்டியா' கூட்டணிக்கு வெற்றியை வழங்குவர்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி