நாகேந்திரா - யோகேஸ்வர் அமைச்சர் பதவிக்கு போட்டி
நாகேந்திரா - யோகேஸ்வர் அமைச்சர் பதவிக்கு போட்டி
நாகேந்திரா - யோகேஸ்வர் அமைச்சர் பதவிக்கு போட்டி
ADDED : மார் 11, 2025 11:14 PM

பெங்களூரு; அமைச்சர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் நாகேந்திரா, யோகேஸ்வர் இடையில், போட்டி ஏற்பட்டு உள்ளது.
கர்நாடக பழங்குடியினர் நல துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டிற்கு பொறுப்பு ஏற்று, அமைச்சராக இருந்த நாகேந்திரா தன் பதவியை ராஜினாமா செய்தார். முறைகேடு வழக்கில் நாகேந்திராவை, அமலாக்கத்துறை கைது செய்தது. இரண்டு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.
நாகேந்திராவை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்வோம் என்று, முதல்வர் சித்தராமையா கூறி இருந்தார். ஆனால் அவர் கூறி, ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னப்பட்டணா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யோகேஸ்வர் வெற்றி பெற்றார்.
இவர் முன்பு பா.ஜ.,வில் இருந்த போது அமைச்சராக இருந்தவர். எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசுக்கு வந்ததால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று, துணை முதல்வர் சிவகுமார் நினைக்கிறார். ஆனால் நாகேந்திராவை அமைச்சராக்க, சித்தராமையா நினைக்கிறார்.
நாகேந்திரா - யோகேஸ்வர் இடையில் அமைச்சர் பதவிக்கு, கடும் போட்டி எழுந்துள்ளது. மேலிட ஆதரவு கிடைக்கும் நபருக்கு, அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.