ஆர்.ஆர்.நகரில் போட்டி; களமிறங்கிய காங்., குஸ்மா
ஆர்.ஆர்.நகரில் போட்டி; களமிறங்கிய காங்., குஸ்மா
ஆர்.ஆர்.நகரில் போட்டி; களமிறங்கிய காங்., குஸ்மா
ADDED : மார் 11, 2025 11:15 PM

பெங்களூரு; கர்நாடக சட்டசபைக்கு 2023ல் நடந்த தேர்தலில், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜ., முனிரத்னா, காங்கிரஸ் குஸ்மா இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் முனிரத்னா வெற்றி பெற்றார்.
அதன்பின், ஒப்பந்ததாரர் செலுவராஜு மனைவியை ஆபாசமாக திட்டியது, பா.ஜ., பெண் பிரமுகர் பலாத்கார வழக்கில் முனிரத்னா கைதானார். தற்போது ஜாமினில் உள்ளார்.
பலாத்கார வழக்கை மையமாக வைத்து பிரசாரம் செய்து, முனிரத்னாவை தோற்கடிக்க, காங்கிரஸ் இப்போது இருந்தே தயாராகி வருகிறது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற, ஆர்.ஆர்.நகர் தொகுதியில் குஸ்மா, தீவிரமாக கள பணியாற்றி வருகிறார். தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.