கன்னட நடிகர்களை மிரட்டுவதா? சிவகுமாருக்கு சிம்ஹா கண்டனம்!
கன்னட நடிகர்களை மிரட்டுவதா? சிவகுமாருக்கு சிம்ஹா கண்டனம்!
கன்னட நடிகர்களை மிரட்டுவதா? சிவகுமாருக்கு சிம்ஹா கண்டனம்!
ADDED : மார் 11, 2025 11:13 PM

மைசூரு; ''மாநிலத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் எவ்வளவு வரி செலுத்துகின்றனர் என்பதை அறிக்கையாக வெளியிட தயாரா,'' என, மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா கேள்வி எழுப்பி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டை, 'ஹலால் பட்ஜெட்' என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் எவ்வளவு வரி செலுத்துகின்றனர். மசூதிகள், தேவாலயங்களில் இருந்து மாநில அரசு, 5 ரூபாயாவது வரி பெறுகிறதா.
மதரசாக்கள் மூடல்
பட்ஜெட்டில் ஒக்கலிகர், லிங்காயத்துகள், பிராமணர்கள், மடிவாளா போன்ற வாரியங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளீர்கள் என்பது தெரியாதா. இன்றும் கூட சில முஸ்லிம்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதரசாக்கள், உருது பள்ளிகள் மூடப்பட வேண்டும்.
முதல்வர் சித்தராமையா, தலிபான் அரசு நடத்துகிறார் என்றால், துணை முதல்வர் சிவகுமார், குண்டர்கள் அரசு நடத்தி வருகிறார்.
கர்நாடகா, உங்களின் ரியல் எஸ்டேட் அலுவலகமா. உங்கள் அரசியல் லாபத்துக்காக மேகதாது ஊர்வலம் நடத்தினீர்கள்.
தற்பெருமை
நீங்கள் நடத்தும் ஊர்வலத்தில் பங்கேற்பதற்கு நடிகர்கள் சிவராஜ்குமார், சுதீப், யஷ் போன்றோர் உங்களின் கட்சி உறுப்பினரா.
மீண்டும் மேகதாது தொடர்பான ஊர்வலம் நடத்தினால், காங்கிரஸ் கட்சி கொடியின்றி நானும் வருவேன்; எங்கள் கட்சியினரும் பங்கேற்போம். உங்கள் தற்பெருமையை விட்டு விட்டு கவனமா இருங்கள்.
கர்நாடகாவுக்கு கன்னட திரையுலகினர் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளனர். சிவராஜ்குமார், யஷ், டாலி தனஞ்செய் போன்றோர் வேறு மொழி படங்களில் நடித்தாலும், கன்னடத்திற்கு புகழை தேடித் தருகின்றனர்.
முடா முறைகேட்டை கண்டித்து, ஊர்வலம் நடத்தினோம். இதில் சினிமா நடிகர்கள் பங்கேற்கவில்லை. ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்டோமா.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதல்வர் முன்னிலையில், அமைச்சர்கள் சரணபிரகாஷ் பாட்டீல், போசராஜு ஆகியோர் சண்டை போட்டு கொண்டுள்ளனர். ஐந்து ஆண்டுகள் அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. என்ன வேண்டுமானாலும் செயயுங்கள்; மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.