டில்லி மெட்ரோ - கொங்கன் ரயில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
டில்லி மெட்ரோ - கொங்கன் ரயில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
டில்லி மெட்ரோ - கொங்கன் ரயில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜூன் 07, 2024 07:19 PM
புதுடில்லி:டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை, நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் மெட்ரோ ரயில் திட்டங்களில் இணைந்து பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாது.
புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், டில்லி மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் பி.கே. கார்க் மற்றும் கொங்கன் ரயில்வே நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் குமார் ஜா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
டில்லி மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனர் அனுஜ் தயாள் கூறியதாவது:
மெட்ரோ ரயில் பாதை, ரயில் பாதை, அதிவேக ரயில் இயக்கம், நெடுஞ்சாலைகள், பிரமாண்ட பாலங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை இரு நிறுவனங்களும் இணைந்து நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படுத்தும்.
மேலும் நிறுவன கட்டிடங்கள், பணிமனைகள், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகள் மற்றும் ரயில்வே மின்மயமாக்கல் பணிகளையும் இந்த நிறுவனங்கள் செய்து கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.