கேரளாவில் நோட்டோவுக்கு 1.58 லட்சம் ஓட்டுகள் 18 தொகுதிகளில் நான்காம் இடம்
கேரளாவில் நோட்டோவுக்கு 1.58 லட்சம் ஓட்டுகள் 18 தொகுதிகளில் நான்காம் இடம்
கேரளாவில் நோட்டோவுக்கு 1.58 லட்சம் ஓட்டுகள் 18 தொகுதிகளில் நான்காம் இடம்
ADDED : ஜூன் 07, 2024 07:17 PM
மூணாறு:கேரளாவில் நடந்த லோக்சபா தேர்தலில் நோட்டோவில் 1.58 லட்சம் ஓட்டுகள் பதிவான நிலையில் அது 18 தொகுதிகளில் நான்காம் இடத்தை பெற்றது.
தேர்தலின் போது அரசியல்கட்சி மற்றும் வேட்பாளர் மீது அதிருப்தி கொண்டவர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் யாருக்கும் ஓட்டளிக்கவிருப்பமில்லை என நோட்டோ வில் ஓட்டை பதிவு செய்வதுண்டு. அதில் ஓட்டளிக்க சிலர் பரிந்துரைப்பது வழக்கம்.
அதன்படி கேரளாவில் லோக்சபா தேர்தலில் 1,58,376 ஓட்டுகள் நோட்டோவில் பதிவானது. மாநிலத்தில் வடகரா, எர்ணாகுளம் ஆகிய தொகுதிகள் தவிர மற்ற 18 தொகுதிகளில் நோட்டோ நான்காவது இடத்தை பெற்றது.
மிகவும் அதிகமாக ஆலத்தூர் தொகுதியில் 12,033 ஓட்டுகள் நோட்டோவில் பதிவானது. இது தேர்தலில் பதிவான மொத்த ஓட்டில் 1.21 சதவீதமாகும். கோட்டயம் தொகுதியில் 11933 ஓட்டுகள் பதிவாகி இரண்டாம் இடத்தை பெற்றது. இது பதிவான ஓட்டுகளில் 1.43 சதவீதமாகும்.
தொகுதி வாரியாக நோட்டோவுக்கு கிடைத்த ஓட்டுகள்:
காசர்கோடு 7112, கண்ணூர் 8873, வடகரா 2909, வயநாடு 6999, கோழிக்கோடு 6316, மலப்புரம் 6766, பொன்னாணி 6561, பாலக்காடு 8793, ஆலத்தூர் 12,033, திருச்சூர் 6072, சாலக்குடி 8063, எர்ணாகுளம் 7758, இடுக்கி 9519, கோட்டயம் 11933, ஆலப்புழா 7365, மாவேலிக்கரா 9883, பத்தனம்திட்டா 8411, கொல்லம் 6546, ஆற்றிங்கல் 9711, திருவனந்தபுரம் 6753.