ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்பு
ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்பு
ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்பு
ADDED : ஜூன் 12, 2024 05:25 PM

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்றார். விழாவில், பிரதமர் மோடி , உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒடிசாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இன்று (ஜூன் 12) புவனேஸ்வரில் நடந்த விழாவில், ஒடிசா மாநில முதல்வராக மோகன் மஜி பதவியேற்றார். துணை முதல்வர்களாக பிரவதி பரிதா மற்றும் கே.வி.சிங் தியோ பதவியேற்றனர். இவர்களுக்கு அம்மாநில கவர்னர் ரகுபர் தாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தான் முதல்வராக பதவி வகித்தார். 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.