Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவருக்கு சரமாரி அடி: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

ADDED : ஜூன் 12, 2024 05:44 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெலகாவி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஐ.பி.எஸ்., அதிகாரி அலோக் குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஜெயேஷ் பூஜாரி, மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியதால், அங்கிருந்தோர், அவரை சரமாரியாக தாக்கினர்.இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மங்களூரு இரட்டை கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜெயேஷ் பூஜாரி, பெலகாவி ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்தாண்டு ஜனவரி 14, மார்ச் 21ம் தேதிகளில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, சிறையில் இருந்தபடி, தனக்கு 10 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.

வழக்கு பதிவு செய்த மஹாராஷ்டிரா போலீசார், ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயேஷ் பூஜாரியை, மஹாராஷ்டிராவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை வழக்கில் கைதாகி உள்ள இவர், பயங்கரவாதி அப்சர் பாஷாவுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.

இதேபோன்று, கடந்த 2018 ஏப்., 21ல், அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி.பி.,யாக இருந்தவரும், தற்போது மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏ.டி.ஜி.பி.,யாக உள்ள அலோக் குமாருக்கும் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கு விசாரணைக்காக இன்று மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். இவ்வழக்கில் அவரின் மனு ஏற்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அவர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். அங்கிருந்த பொது மக்கள், வழக்கறிஞர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு, ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us