கோலார் தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கு தயார்
கோலார் தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கு தயார்
கோலார் தொகுதி ஓட்டு எண்ணிக்கைக்கு தயார்
ADDED : ஜூன் 01, 2024 06:45 AM

கோலார் லோக்சபா தொகுதியில், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளும், சிக்கபல்லாப்பூர் தொகுதியில் உள்ள இரண்டு தொகுதிகளும் என, எட்டு சட்டசபைத் தொகுதிகள் அடங்கி உள்ளன.
இத்தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன் கோலார் இளநிலை கல்லுாரியில் வைக்கப் பட்டுள்ளன. 24 மணி நேரமும் சுழலும் கண்காணிப்பு கேமராக்களுடன், மூன்று அடுக்கு பாதுகாப்பில் இருந்து வருகிறது.
ஓட்டு எண்ணிக்கை குறித்து நேற்று முன்தினம் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா தலைமையில் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் கூறுகையில், ''ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள், 4ம் தேதி காலை 6:00 மணிக்குள் ஆஜராக வேண்டும். 7:00 மணிக்கெல்லாம் தங்களுக்கு ஒதுக்கப்படும் அறைக்குள் சென்றடைய வேண்டும்.
''மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் பார்வையிடலாம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செல்ல அனுமதி இல்லை. காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.க்கை பணிகள் நிறைவு செய்ய வேண்டும்,'' என்றார்.
கோலார் மாவட்ட எஸ்.பி., நாராயணா கூறுகையில், ''தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக நான்கு மேஜைகளும், மற்ற ஓட்டுகள் எண்ணுவதற்காக 14 மேஜைகளும் போடப்பட்டு இருக்கும். தேர்தல் ஊழியர்கள், ஏஜென்டுகள் தங்கள் மேஜையை விட்டு அடுத்த மேஜைக்கு செல்லக்கூடாது,'' என்றார்.
ஓட்டு எண்ணிக்கைக்கான அடையாள பேட்ஜ்கள், உரியவர்களுக்கு இன்று வழங்கப்பட உள்ளன
- நமது நிருபர் -.