ஏழைகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்
ஏழைகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்
ஏழைகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் அறிமுகம்: நிர்மலா சீதாராமன்
ADDED : ஜூலை 23, 2024 03:57 PM

புதுடில்லி : ‛‛ மத்திய பட்ஜெட்டில், ஏழைகளுக்கு பலன் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது'', என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பங்குச் சந்தை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. வரி அல்லாத மற்ற வருவாய் ஈட்டலை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் இது. மத்திய பட்ஜெட் நாட்டிற்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. ஏழைகளுக்கு பலன் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மூல ஆதாயங்களுக்காக வரி விதிப்பு அணுகுமுறையை எளிமைப்படுத்த விரும்பினோம்.
வரி நடைமுறைகள் பட்ஜெட்டில் எளிமையாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் உண்மையான சராசரி வரிவிதிப்பு குறைந்துள்ளது. நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது. வரி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பங்குச்சந்தை முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.