அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்
அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்
அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்
ADDED : ஜூலை 23, 2024 04:34 PM

ஸ்ரீநகர்: 'அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் சேர வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் அரசியல் கட்சிகளில் சேரட்டும்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது நிருபர்கள் கேள்விக்கு, உமர் அப்துல்லா, ‛‛ அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் சேர வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் அரசியல் கட்சிகளில் சேரட்டும்'' என பதில் அளித்தார்.
மேலும், அவர் கூறியதாவது: எங்களுக்கு மூன்று முக்கியமான பிரச்னைகள் உள்ளன. வேலையின்மை மிகப்பெரிய பிரச்னை. காஷ்மீரில் வேலையின்மை விகிதம் அதிகரித்து உள்ளது. எங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. பார்லிமென்டில் இந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.