மேற்குவங்கத்தை இரண்டாக பிரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
மேற்குவங்கத்தை இரண்டாக பிரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
மேற்குவங்கத்தை இரண்டாக பிரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
UPDATED : ஜூலை 30, 2024 10:07 AM
ADDED : ஜூலை 30, 2024 02:36 AM

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை என்ன விலை கொடுத்தாவது தடுப்பேன் என சட்டசபையில் முதல்வர் மம்தா பேசினார்.
லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜார்க்கண்ட் மாநில பா.ஜ. எம்.பி. ஒருவர் பேசுகையில், மேற்குவங்கம், பீஹார், ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களிலிருந்து சில மாவட்டங்களை ஒன்றிணைந்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் என பேசினார்.
இதற்கு மேற்குவங்க திரினமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது 6 நாள் மேற்குவங்க சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று சட்டசபையில் முதல்வர் மம்தா பேசியதாவது, மேற்குவங்க மாநிலம் இரண்டாக பிரிவதை என்ன விலை கொடுத்தாவது தடுப்பேன்.
அப்படி அவர்கள் பிரிக்க முயற்சித்தால் அதனை எவ்வாறு எதிர்ப்பது என்பதை அவர்களுக்கு காண்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.