'என் சீடன் என சொல்ல வெட்கப்படுகிறேன்' தர்ஷன் மீது நாடக தயாரிப்பாளர் அதிருப்தி
'என் சீடன் என சொல்ல வெட்கப்படுகிறேன்' தர்ஷன் மீது நாடக தயாரிப்பாளர் அதிருப்தி
'என் சீடன் என சொல்ல வெட்கப்படுகிறேன்' தர்ஷன் மீது நாடக தயாரிப்பாளர் அதிருப்தி
ADDED : ஜூன் 16, 2024 07:28 AM

மைசூரு: ''நடிகர் தர்ஷனுக்கு, நல்ல மனைவி, அழகான மகன் உள்ளார். இவர்களின் குடும்பத்தில் சனியை போன்று, பவித்ரா கவுடா புகுந்தார்,'' என, நாடக மன்ற முன்னாள் இயக்குனர் அட்டன்டா கார்யப்பா தெரிவித்தார்.
அட்டன்டா கார்யப்பா, நாடகங்கள் தயாரித்து அரங்கேற்றியவர். நடிகர் தர்ஷனுக்கு நடிப்பு கற்றுக் கொடுத்த முதல் குரு. தற்போது, கொலை வழக்கில் கைதாகி, தர்ஷன் சிறைக்குச் சென்றதால், கார்யப்பா வருத்தம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து, மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த 1987ல் தர்ஷனுக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தேன். அப்போது அவர் ஏழாம் வகுப்பில் இருந்தார். ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர் போன்று இருப்பார். எங்கள் நாடகத்தில், அவருக்கு ராஜா வேடம் கொடுத்தோம். அவரும் நன்றாக நடித்தார்.
என் மனைவி தான், தர்ஷனுக்கு அரிதாரம் பூசினார். அதன்பின், இவர் நாயகனாக சினிமாக்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த முதல் படம், எனக்கு பிடிக்கவில்லை.
நான் கலைஞன். கலைஞர்களை வளர்ப்பது என் பொறுப்பு.
நீனாசம் நாடக பயிற்சி மையத்தில் நடிப்பு பயிற்சி பெறும்படி, தர்ஷனுக்கு கடிதம் கொடுத்து அனுப்பினேன். அதன்பின் அங்கு சென்று பயிற்சி பெற்றார்.
தர்ஷனுக்கு நல்ல மனைவி, அழகான மகன் இருந்தும், இவர்களின் வாழ்க்கையில் சனியை போன்று, பவித்ரா கவுடா புகுந்ததால், அவர் வாழ்க்கை பாழானது.
வெற்றி கிடைத்ததால், இவருக்குள் அகங்காரம் வளர்ந்தது.
சினிமாவில் செய்வதை, நிஜ வாழ்க்கையில் செய்ய முற்பட்டு, இப்போது சிக்கியுள்ளார். என் சீடன் என இவரைச் சொல்லவே, எனக்கு வெட்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.