எஸ்.ஐ., தொல்லையால் உறவினர் தீக்குளித்து தற்கொலை
எஸ்.ஐ., தொல்லையால் உறவினர் தீக்குளித்து தற்கொலை
எஸ்.ஐ., தொல்லையால் உறவினர் தீக்குளித்து தற்கொலை
ADDED : ஜூன் 16, 2024 07:27 AM

உத்தர கன்னடா: நிலப் பிரச்னையால் எஸ்.ஐ., தொல்லை கொடுப்பதாகக் கூறி, போலீஸ் நிலையம் முன், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
உத்தர கன்னடா மாவட்டம், ஜோய்டா டவுன் அனுமன் நகரில் வசித்தவர் பாஸ்கர், 45. இவரது உறவினர் பசவராஜ், 42. ஜோய்டா போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக உள்ளார்.
பாஸ்கருக்கும், பசவராஜுக்கும் பல ஆண்டுகளாக நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது. விசாரணை என்ற பெயரில், பாஸ்கரை அடிக்கடி போலீஸ் நிலையம் வரவழைத்து பசவராஜ் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பாஸ்கர் புகார் செய்தும் பசவராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, பாஸ்கரின் மாமனாருக்கு, போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
தன்னை துன்புறுத்திய போலீசார், தனது மாமனாரையும் துன்புறுத்துவதாக நினைத்து 13ல் மாலை, ஜோய்டா போலீஸ் நிலையத்துக்கு பாஸ்கர் சென்றார்.
'எதற்காக என் மாமனாருக்கு சம்மன் கொடுத்தீர்கள்?' என கேட்டுள்ளார். அதற்கு போலீசார் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், பாஸ்கரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை உயிரிழந்தார்.
பாஸ்கரின் மரணத்தை கண்டித்து, 'குனாபி சமாஜ்' அமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.