17 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
17 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
17 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 16, 2024 07:28 AM
ராய்ச்சூர்: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, ராய்ச்சூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ராய்ச்சூர் லிங்கசுகுர் நிரலகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹுல்லப்பா ராமண்ணா, 25. இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்குள் புகுந்த ஹுல்லப்பா, சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார். கத்தியை காண்பித்து மிரட்டி சிறுமியை, ஹுல்லப்பா பலாத்காரம் செய்தார். “வெளியே கூறினால், உன்னையும், உனது பெற்றோரையும் கொன்று விடுவேன்,” என, மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
வெளியே சென்று வீடு திரும்பிய, பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி, சிறுமி கதறி அழுதார்.
ஹுல்லப்பா மீது லிங்கசுகுர் போலீசில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். ஹுல்லப்பா கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ராய்ச்சூர் மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி ஜகாத் தீர்ப்பு கூறினார்.
ஹுல்லப்பாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாநில சட்ட சேவைகள் ஆணையம் 9 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.