தோட்டக்கலைத்துறை மலர் கண்காட்சி அம்பேத்கருக்கு அர்ப்பணிக்க முடிவு
தோட்டக்கலைத்துறை மலர் கண்காட்சி அம்பேத்கருக்கு அர்ப்பணிக்க முடிவு
தோட்டக்கலைத்துறை மலர் கண்காட்சி அம்பேத்கருக்கு அர்ப்பணிக்க முடிவு
ADDED : ஜூலை 10, 2024 04:11 AM

பெங்களூரு : சுதந்திர தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த, தோட்டக்கலைத்துறை தயாராகி வருகிறது. இம்முறை மலர் கண்காட்சி, அம்பேத்கருக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது.
கர்நாடக தோட்டக்கலைத்துறை சார்பில், ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, பெங்களூரின் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஜனவரியில் குடியரசு தின மலர் கண்காட்சி, பசவண்ணருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. அவரது படைப்புகளை பூக்கள் வடிவில் கொண்டு வந்தது. இது பாராட்டத்தக்கதாக அமைந்தது.
தற்போது சுதந்திர தின மலர் கண்காட்சிக்கு, தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்கிறது. இம்முறை அம்பேத்கருக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
லால்பாக் பூங்காவில், சுதந்திர தின மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறோம். நாட்டுக்கு அரசியல் சாசனம் வகுத்துக் கொடுத்த, அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில், இம்முறை மலர் கண்காட்சி சமர்ப்பணம் செய்கிறோம். தோட்டக்கலைத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் உட்பட, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது.
அம்பேத்கர் பற்றி, நன்றாக அறிந்துள்ள வல்லுனர்கள், ஸ்காலர்ஸ், பல்வேறு பல்கலைக்கழகங்களில், அம்பேத்கர் குறித்து ஆய்வு செய்தவர்களுடன் ஆலோசனை பெறப்பட்டது.
அம்பேத்கரின் பிறப்பு, வளர்ந்தது, சமுதாயத்துக்கு அவர் செய்த சாதனைகளை, பூக்கள் மூலமாக கொண்டு வருவோம். வல்லுனர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவோம்.
அவரது உருவச்சிலை, புகைப்படங்கள் மலர் கண்காட்சிக்கு பயன்படுத்தப்படும். இதுகுறித்து, மேலும் மூன்று வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது.
அவர்களின் ஆலோசனை பெற்று, லால்பாக் கண்ணாடி மாளிகையில், அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை எப்படி காண்பிக்க வேண்டும் என்பதை, முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.