வெப்ப அலை பி.எஸ்.எப்., வீரர்கள் பலி
வெப்ப அலை பி.எஸ்.எப்., வீரர்கள் பலி
வெப்ப அலை பி.எஸ்.எப்., வீரர்கள் பலி
ADDED : ஜூலை 21, 2024 06:14 AM
ஆமதாபாத், : குஜராத்தில் இந்தியா - பாக்., சர்வதேச எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்ட பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள், வெப்ப வாதம் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தனர்.
குஜராத்தில் இந்தியா - பாக்., சர்வதேச எல்லைப் பகுதியான ஹராமி நாலா உள்ளிட்ட இடங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இந்தப் பகுதியில், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகிறது.
இந்நிலையில், ஹராமி நாலா அருகே, பி.எஸ்.எப்., உதவி கமாண்டர் விஷ்வா தியோ, தலைமை காவலர் தயாள் ராம் ஆகியோர், மற்ற வீரர்களுடன் சமீபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வெப்ப வாதம் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் இருவரும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர்.
அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு, விஷ்வா தியோ, தயாள் ராம் ஆகியோரை சக வீரர்கள் அழைத்துச் சென்றனர். எனினும், அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.