சபையில் எப்படி நடக்க வேண்டும் எம்.பி.,களுக்கு நினைவூட்டல்
சபையில் எப்படி நடக்க வேண்டும் எம்.பி.,களுக்கு நினைவூட்டல்
சபையில் எப்படி நடக்க வேண்டும் எம்.பி.,களுக்கு நினைவூட்டல்
ADDED : ஜூலை 21, 2024 06:12 AM
சபையில் எப்படி நடக்க வேண்டும்
சபையில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான கையேடு ராஜ்யசபாவின் இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள்:
1சபை தலைவர் அளிக்கும் உத்தரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சபைக்குள்ளோ அல்லது வெளியிலோ விமர்சிக்கக் கூடாது
2சபைக்குள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் உட்பட எந்த கோஷங்களையும் எம்.பி.,க் கள் எழுப்பக் கூடாது
3சபைக்குள் பதாகைகளை உள்ளிட்டவை காட்டுவது விதி மீறலாகும். பார்லிமென்டில் பேசக்கூடாத வார்த்தைகளை, சபைக்குள் உச்சரிக்கக் கூடாது
4ஒரு எம்.பி., பேசுகையில், அவருடைய பேச்சு சபை நடவடிக்கைக்கு எதிரானதாக இருப்பதாக, சபைத் தலைவர் அறிவித்தால், அது சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும்
5சபைக்குள் வரும்போதும், போகும்போதும், சபைத் தலைவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். மற்றொரு எம்.பி., அல்லது அமைச்சர் குறித்து விமர்சித்தால், அவர் பதிலளிக்கும்போது, விமர்சித்த எம்.பி., சபையில் இருக்க வேண்டும்.