பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சியே: மம்தா
பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சியே: மம்தா
பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சியே: மம்தா
UPDATED : ஜூன் 04, 2024 08:13 PM
ADDED : ஜூன் 04, 2024 06:34 PM

கோல்கட்டா: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சி அளிப்பதாக மேற்குவங்க திரிணமுல் காங்., முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 04) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
இத்தேர்தல் முடிவுகள் குறித்து மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டி, பா.ஜ.கட்சிக்கு இத்தேர்லில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் ரீதியாக பா.ஜ.,வை திரிணமுல் காங்., வென்றுள்ளது. சந்தேஷ்காலி விவகாரத்தில் பலமுறை பொய் சொல்லியே வந்தது பா.ஜ.,
இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்த பா.ஜ., முயற்சிக்கிறது.மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் பிரதமர் மோடி. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடியால் இனி ‛‛இண்டியா'' கூட்டணியை உடைக்க முடியாது.
உத்தவ், சரத்பவார், ஆகிய தலைவர்களுடனும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இத்தேர்தலில் கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி . இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.