2026 தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது: இ.பி.எஸ்
2026 தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது: இ.பி.எஸ்
2026 தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது: இ.பி.எஸ்
ADDED : ஜூன் 04, 2024 06:55 PM

சென்னை: 2026 தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது என தேர்தல் முடிவு குறித்து அதிமுக பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவித்து உள்ளார்.
அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது: அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கு மற்றும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. மக்களவை தேர்தல் முடிவு அதிமுகவை சோர்வடைய செய்யாது. அதிமுகவின் உழைப்பு தியாகத்தை எண்ணி கண் கலங்குகிறேன்.
அதிமுகவினரின் உழைப்பு தியாகத்திற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். அதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடைபோட உறுதி ஏற்கிறேன் .2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.