மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு
மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு
மரக்கன்றுகள் நடுவதற்கு கவர்னர் அழைப்பு
ADDED : ஜூன் 05, 2024 11:41 PM
புதுடில்லி,:பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கிய மரம் நடும் இயக்கத்தில் மக்கள் பங்கேற்குமாறு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கேட்டுக் கொண்டார்.
'எக்ஸ்' பக்கத்தில் அவர் பதிவிட்ட கருத்து:
தங்கள் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நடவேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாசுபாட்டைத் தடுக்கவும், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சமாளிக்கவும் மரக்கன்றுகளை நடுவது மிகவும் பயனுள்ள தீர்வாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.