ADDED : ஜூன் 06, 2024 05:06 AM

தங்கவயல், : பள்ளி வேன் மோதி, 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
கேசம்பள்ளி அருகே உள்ள தேவரஹள்ளி கிராமத்தில், பாலரெட்டி என்பவரின் 3 வயது பெண் குழந்தை கானவி. தன் வீட்டின் அருகே தெருவில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தது.
வீட்டின் அருகே உள்ள திருப்பத்தில், தனியார் பள்ளி வேன் ஒன்று பின் பக்கமாக இயக்கியபோது குழந்தை கானவி, வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி, அதே இடத்தில் பலியானது.
வேனை நிறுத்தாமல் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றார். பள்ளி அருகே வேனை நிறுத்தி விட்டு தலைமறைவானார். இந்த விபத்து குறித்து கேசம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்தனர்.