பா.ஜ., தொண்டரின் 2 கி.மீ., நமஸ்காரம்
பா.ஜ., தொண்டரின் 2 கி.மீ., நமஸ்காரம்
பா.ஜ., தொண்டரின் 2 கி.மீ., நமஸ்காரம்
ADDED : ஜூன் 06, 2024 05:09 AM

விஜயபுரா : லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதால், தொண்டர் ஒருவர் தன் வீட்டில் இருந்து கோவில் வரை சாஸ்டாங்கமாக கும்பிட்டபடி சென்றார்.
விஜயபுரா மாவட்டம், கோல்ஹாரா நகரை சேர்ந்தவர் சிவு, 30. பா.ஜ., தொண்டராக உள்ளார். லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றால், வீட்டில் இருந்து, திகம்பரேஸ்வரர் கோவிலுக்கு சாஸ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டிருந்தார்.
இதன்படி, பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து திட்டமிட்டபடி தனது வீட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள திகம்பரேஸ்வரா கோவிலுக்கு சாஸ்டாங்கமாக நமஸ்காரம் செய்தபடி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.