ADDED : ஜூலை 17, 2024 09:18 PM
நரேலா: டில்லியின் புறநகர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
நரேலா தொழிற்சாலை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் பிரிவில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு அதிகாலை 1:42 மணி அளவில் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு 16 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.