தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
ADDED : ஜூலை 17, 2024 09:23 PM
திமர்பூர்:தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மற்றும் சிறப்பு குழந்தைகள் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் துவக்க வகுப்புகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான சேர்க்கை காலக்கெடுவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான துவக்க நிலை வகுப்புகளான- நர்சரி, கே.ஜி., முதல் வகுப்பு-களில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு, சிறப்பு குழந்தைகள் சேர்வதற்கான காலக்கெடு மே 31ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அவகாசம், வரும் 31ம் தேதி மதியம் 1:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் புதிய காலக்கெடுவின்படி, மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.