கடும் வெப்ப அலை மின்நுகர்வு உச்சம்
கடும் வெப்ப அலை மின்நுகர்வு உச்சம்
கடும் வெப்ப அலை மின்நுகர்வு உச்சம்
ADDED : ஜூன் 20, 2024 02:32 AM
புதுடில்லி:டில்லியில் நிலவும் வெப்ப அலையானது, மின் தேவையை 8,656 மெகாவாட் என்ற இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தியுள்ளது.
பல வாரங்களாக நீடித்த வெப்ப அலைக்கு மத்தியில் அதிக அளவில் மின்சாரம் நுகர்ந்ததால், நேற்று பிற்பகலில் டில்லியின் உச்ச மின் தேவை 8,656 மெகாவாட்டாக உயர்ந்ததாக டிஸ்காம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் அதிகபட்ச மின்நுகர்வாக பதிவானது. அன்றைய தினம் மின் நுகர்வு 8,647 மெகாவாட்டாக இருந்தது. நேற்று முதல் நாள் நுகர்வு முறியடிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 3:06:55 மணி அளவில் 8,656 மெகாவாட்டை எட்டியது.
டில்லி மக்கள், 12 ஆண்டுகளில் இல்லாத வெப்பமான இரவை செவ்வாய்க்கிழமை அனுபவித்தனர். குறைந்தபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இது இந்த காலகட்டத்தின் இயல்பான அளவை விட எட்டு புள்ளிகளுக்கு மேல் உள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.