தலைமை செயலருக்கு கூடுதல் பொறுப்பு
தலைமை செயலருக்கு கூடுதல் பொறுப்பு
தலைமை செயலருக்கு கூடுதல் பொறுப்பு
ADDED : ஜூன் 20, 2024 02:33 AM
புதுடில்லி,:டில்லி தலைமைச் செயலர் நரேஷ் குமாருக்கு புதுடில்லி முனிசிபல் கவுன்சிலின் தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பொறுப்பை அடுத்த இரண்டு மாதங்களுக்கு கூடுதலாக தலைமைச் செயலர் நரேஷ் குமார் கவனிப்பார் என, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கடிதம், மாநில துணைநிலை கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 30ல் ஓய்வு பெறவிருந்த நரேஷ் குமாருக்கு முதன் முறையாக ஆறு மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இரண்டாவது முறையாக கடந்த மாதம் அவருக்கு மேலும் மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.