குப்பையில் மின்சாரம்: கமிஷனர் ஆய்வு
குப்பையில் மின்சாரம்: கமிஷனர் ஆய்வு
குப்பையில் மின்சாரம்: கமிஷனர் ஆய்வு
ADDED : ஜூன் 14, 2024 07:49 AM

பிடதி: குப்பைக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தில், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று ஆய்வு செய்தார்.
ராம்நகர் பிடதியில் கர்நாடக மின்வாரிய கழகம் சார்பில், 10 ஏக்கர் நிலத்தில் 260 கோடி ரூபாய் செலவில், குப்பைக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று ஆய்வு செய்தார்.
பெங்களூரு நகரில் சேரும் குப்பைக் கழிவுகளை இங்கு கொண்டு வந்து, மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த மையம் செயல்பட துவங்கினால் தினமும் 11 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.
இதன் பின்னர் நகரின் பல இடங்களில் ஆய்வு செய்த அவர், குப்பை பிரச்னை குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். இதன்பின், கொல்லஹள்ளி கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 170 ஏக்கர் நிலத்தில், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.