தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுதும் வாபஸ்
தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுதும் வாபஸ்
தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுதும் வாபஸ்
ADDED : ஜூன் 07, 2024 01:46 AM
புதுடில்லி, லோக்சபா தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான நிலையில், நாடு முழுதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளை விலக்கிக் கொள்வதாக தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
தேர்தலை நியாயமான முறையில் நடத்தவும், அதில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், ஒவ்வொரு தேர்தலின் போதும் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை செயலர் மற்றும் மாநில தலைமை செயலர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'லோக்சபா தேர்தல் மற்றும் சிக்கிம், அருணாச்சல், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
'இது உடனடியாக அமலுக்கு வருகிறது' என கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் துணை கமிஷனர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர்சிங் சந்து ஆகியோர் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லோக்சபா எம்.பி.,க்களின் பட்டியலை வழங்கினர்.