ராம்நகர் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினர் போராட்டம்
ராம்நகர் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினர் போராட்டம்
ராம்நகர் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினர் போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 04:30 AM

ராம்நகர், : ராம்நகர் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்தக்கோரி, கூட்டுறவு சங்க அலுவலகம் முன் பா.ஜ., -- ம.ஜ.த., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ராம்நகர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் பதவிக் காலம், ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, தேர்தல் நடக்கவில்லை.
இந்த சங்க தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, கூட்டுறவு சங்கம் முன் பா.ஜ., -- ம.ஜ.த., கட்சியினர் ஒன்றிணைந்து நேற்று போராட்டம் நடத்தினர். ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் தலைமையில் நடந்த போராட்டத்தில், இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டுப் போட முயன்றனர். ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்த முயன்றபோது போலீசார் - போராட்டக்காரர்கள் இடையில் 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது.
நிகிலை பிடித்து போலீசார் தள்ளியதாகக் கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.
9.7.2024 / சுப்பிரமணியன்
10_DMR_0006
போலீசாரிடம் ம.ஜ.த., மாநில இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இடம்: ராம்நகர்.