பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை
ADDED : ஜூலை 21, 2024 07:17 AM

பெங்களூரு: பெங்களூரில் நேற்று, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை வழங்கும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:
குழந்தைகள் காலை உணவு இல்லாமல் பள்ளிக்கு வருவதையும், மதிய உணவு இல்லாமல் மதியம் வரை பள்ளியில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். இதனால் வாரம் இருமுறை உணவும், முட்டையும் கொடுக்க ஆரம்பித்தோம்.
இப்போது அஜிம் பிரேம்ஜி அறக்கட்டளை, அரசுடன் இணைந்து, வாரத்தில் ஆறு நாட்கள் முட்டைகள் வழங்க உள்ளது. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவு அவசியம்.
ஏழைகளின் குழந்தைகளுக்கும் சிறந்த கல்விக்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
அதிகளவில் உறைவிடப்பள்ளிகளை திறந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், விப்ரோ நிறுவன தலைவர் அஜிம் பிரேம்ஜி, துவக்க கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் சித்தராமையா துவக்கிவைத்தார். இடம்: பெங்களூரு.