வாக்குறுதி திட்டங்களுக்கு எஸ்.சி., நிதி போராட்டம் நடத்த தலித் சங்கம் தயார்
வாக்குறுதி திட்டங்களுக்கு எஸ்.சி., நிதி போராட்டம் நடத்த தலித் சங்கம் தயார்
வாக்குறுதி திட்டங்களுக்கு எஸ்.சி., நிதி போராட்டம் நடத்த தலித் சங்கம் தயார்
ADDED : ஜூலை 21, 2024 07:18 AM

பெங்களூரு: எஸ்.சி., பிரிவினரின் நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்தும் அரசின் செயலுக்கு, தலித் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பெங்களூரில், தலித் சங்கர்ஷ சமிதி ஒருங்கிணைப்பாளர் மாவள்ளி சங்கர் அளித்த பேட்டி:
கர்நாடகா அரசு செயல்படுத்திய வாக்குறுதித் திட்டங்களை வரவேற்கிறோம். இந்தத் திட்டங்களுக்கு எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்துவதை, நாங்கள் கண்டிக்கிறோம்.
இலவச திட்டங்களுக்கு, தலித்துகளின் நிதியை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? இதை நாங்கள் எதிர்க்கிறோம்.
தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, இவர்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும். மாறாக சாக்கடை, சாலை வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. உடனடியாக அந்த நிதியை திரும்பப் பெற்று, தலித் சமுதாய நலனுக்கு பயன்படுத்த வேண்டும்.
இவர்களின் நிதியை தவறாக பயன்படுத்துவதை, நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆகஸ்டில் நாங்கள் போராட்டம் நடத்துவோம். எஸ்.சி., - எஸ்.டி.,யினர் மேம்பாட்டுக்காக, இதற்கு முன்பு சித்தராமையா அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இப்போது இந்த நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு, எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என, கூறவில்லை. எனவே பா.ஜ.,வுக்கு எதிராக போராடி, காங்கிரசுக்கு ஆதரவு அளித்தோம்.
இப்போது வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த அரசு, அநியாயம் செய்துள்ளது. இதை கண்டித்து தலித் சங்கங்கள் போராட்டத்தில் இறங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.