கவுன்சிலர் வீட்டுக்கு மட்டும் 'இ - காத்தா': நகராட்சி ஆணையரிடம் சங்கத்தினர் மனு
கவுன்சிலர் வீட்டுக்கு மட்டும் 'இ - காத்தா': நகராட்சி ஆணையரிடம் சங்கத்தினர் மனு
கவுன்சிலர் வீட்டுக்கு மட்டும் 'இ - காத்தா': நகராட்சி ஆணையரிடம் சங்கத்தினர் மனு
ADDED : ஜூலை 02, 2024 11:00 PM

தங்கவயல் : தங்கவயல் கவுதம் நகரில் குடியிருப்போருக்கு,'இ - காத்தா' பதிவு இல்லாததால், வீட்டை விற்கவோ, வாங்கவோ, அடகு வைக்கவோ வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
'தங்கவயல் கவுதம் நகரில் உள்ள வீடுகள் எல்லாமே முறைகேடானவை' என, லோக் ஆயுக்தாவிடம் 18 ஆண்டுகளுக்கு முன்பு புகார் செய்யப்பட்டது.
அதனால், கவுதம் நகரின் பட்டா புத்தகத்தை மாநில லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
'இ - காத்தா' பதிவு செய்ய வேண்டுமானால்,வரியை நிலுவையின்றி செலுத்த நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் 750 வீடுகளை சேர்த்தவர்களும் நகராட்சிக்கு வரி செலுத்தினர். ஆயினும் 'இ - காத்தா' ஒருவருக்கும் வழங்கப்படவில்லை.
கடந்த 2022ல்காந்தி நகர் வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் ஷாலினியின் கணவர் நந்தகுமார் என்பவருக்கு மட்டுமே 'இ-காத்தா' கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், கவுதம் நகர் குடியிருப்போர் நல சங்கத்தலைவர் டாக்டர் விஜயகுமார், செயலர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி ஆணையர் பவன் குமாரை சந்தித்து, 'எங்கள் வீடுகளுக்கும்இ-காத்தா தர வேண்டும்' என மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட பவன் குமார் பரிசீலிப்பதாகஉறுதி அளித்தார்.
நகராட்சி உறுப்பினராக இருப்பவர், தன் வீட்டுக்கு மட்டுமே 'இ - காத்தா' பதிவு செய்திருப்பதால் அதிருப்தி ஏற்பட்டுஉள்ளது.
தங்களின் வீடுகளுக்கும் 'இ-காத்தா' வழங்கக் கோரி நகராட்சி ஆணையர் பவன் குமாரிடம் கவுதம் நகர் குடியிருப்பு நலச் சங்கத்தினர் மனு அளித்தனர். இடம்: தங்கவயல் நகராட்சி, ராபர்ட்சன் பேட்டை.