Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இயக்குனர்களுக்கு தர்ஷன் நெருக்கடி

இயக்குனர்களுக்கு தர்ஷன் நெருக்கடி

இயக்குனர்களுக்கு தர்ஷன் நெருக்கடி

இயக்குனர்களுக்கு தர்ஷன் நெருக்கடி

ADDED : ஜூலை 02, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு : தனக்கு ஜாமின் பெற்றுத் தரும்படி, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு நடிகர் தர்ஷன் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். புகழின் உச்சியில் இருந்த இவர், தற்போது கொலை வழக்கில் சிறையில் அடைப்பட்டிருக்கிறார்.

இவரது காதலி எனப்படும் பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பினார் என்பதற்காக, சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கூலிப்படையை வைத்து கொடூரமாக கொலை செய்ததாக, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக தர்ஷன் உட்பட, பலர் கைதாகி உள்ளனர்.

தர்ஷனை காண தினமும், நண்பர்கள், நடிகர், நடிகையர், ரசிகர்கள் என, பலரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு வருகின்றனர். இவரது மனைவி, மகனும் கூட வந்திருந்தனர்.

வாரம் மூன்று முறை, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு போன் செய்து பேச, தர்ஷனுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

இதுவரை தன் குடும்பத்தினருடன், ஒரு முறை கூட இவர் பேசவில்லை. இரவு நேரத்தில் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு போன் செய்து பேசுகிறார். தன்னை ஜாமினில் எடுக்கும்படி, நெருக்கடி கொடுக்கிறார்.

நிறுத்தப்பட்ட தன் படங்கள் குறித்தும், இயக்குனர், தயாரிப்பாளர்களுடன் தர்ஷன் பேச்சு நடத்தியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us