குடிநீர் வாரிய தலைவர் இன்று குறை கேட்பு
குடிநீர் வாரிய தலைவர் இன்று குறை கேட்பு
குடிநீர் வாரிய தலைவர் இன்று குறை கேட்பு
ADDED : ஜூலை 12, 2024 07:08 AM
பெங்களூரு: பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், இன்று காலை தொலைபேசி மூலம் மக்களின் பிரச்னைகளை கேட்டறிகிறார்.
குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், இன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை தொலைபேசி மூலம், பொதுமக்களின் குறைகளை கேட்டறிகிறார்.
மக்கள் தங்கள் பகுதிகளின் குடிநீர் வினியோகம், சாக்கடைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவது என, மற்ற பிரச்னைகளை பற்றி புகார் அளித்து, சரி செய்து கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 080 - 2294 5119 மற்றும் 080 - 2222 9639.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.