ADDED : ஜூலை 12, 2024 07:07 AM

தேவனஹள்ளி: பெங்களூரு தேவனஹள்ளியில், 'நந்தனா பேலஸ்' உணவகத்தின், 25வது கிளை நேற்று திறக்கப்பட்டது. உணவகத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் திறந்து வைத்தார்.
பின், நந்தனா பேலஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குனர் ரவிசந்தர் கூறியதாவது:
எங்கள் உணவகத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக, புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.
இது, 25வது கிளை ஆகும். 1989ல் இருந்து, உணவு தொழில் செய்து வருகிறேன். எங்கள் உணவகத்தில், மட்டன் பெப்பர் ப்ரை, கீ ரோஸ்ட், பிரான்ஸ் ப்ரை, சிக்கன் பிரியாணி உட்பட வகை வகையான உணவு வகைகள் பிரபலம். வாடிக்கையாளர்களுக்கு தரமான, ருசியான உணவு தருகின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குனர் கே.டி.வெங்கடேஷ் ராஜா, கே.டி.சீனிவாச ராஜா, சங்கீதா மொபைல்ஸ் நிறுவன தலைவர் சுபாஸ் சந்திரா, ஆக்ஸ்போர்ட் கல்வி குழும தலைவர் எஸ்.என்.வி.எல்.நரசிம்ம ராஜு உட்பட பலர் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.