'டெரிடோரியல் ஆர்மி'யில் காங்., செய்தி தொடர்பாளர்
'டெரிடோரியல் ஆர்மி'யில் காங்., செய்தி தொடர்பாளர்
'டெரிடோரியல் ஆர்மி'யில் காங்., செய்தி தொடர்பாளர்
ADDED : ஜூன் 03, 2024 04:54 AM

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவ்யா நரசிம்மமூர்த்தி, ராணுவத்தின் ரிசர்வ் பிரிவான டெரிடோரியல் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
ராணுவத்தில், டெரிடோரியல் ஆர்மியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று 'டிபார்ட்மென்டல்', மற்றொன்று 'நான் டிபார்ட்மென்டல்'. டிபார்ட்மென்டல் பிரிவில், இந்திய பொது சேவை அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் சேரலாம். நான் டிபார்ட்மென்டல் பிரிவில், இந்திய குடிமக்கள் யாரும் சேரலாம்.
நான் டிபார்ட்மென்டல் பிரிவில், நான் கமிஷன்டு ஆபீசராக பவ்யா நரசிம்மமூர்த்தி சேர்ந்துள்ளார். இவர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆவார். டெரிடோரியல் ஆர்மியில் சேர்ந்தவர்கள், ராணுவத்துக்கு அவசியம் ஏற்படும் போது, தன்னார்வ சேவகர்கள் போன்று, பணியாற்ற வேண்டும்.
இந்த பிரிவில், 40,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கிரிக்கெட் வீரர் தோனி, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், கர்நாடகாவின் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கேப்டன் மணிவண்ணன் உட்பட பிரபலமான பலர், டெரிடோரியல் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் நேற்று கூறியதாவது:
டெரிடோரியல் ஆர்மியில், கமிஷன்டு ஆபீசராக சேர்ந்துள்ளேன். நான், ராணுவத்தின் அங்கமானது, எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
டெரிடோரியல் ஆர்மியில், தென் மாநிலங்களில் இருந்து அதிகாரியான ஒரே பெண் மற்றும் 2022ல் டி.ஜி.டி.ஏ., நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற, ஒரே பெண் நான் தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.