/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு ரூரலில் கூடுதல் பாதுகாப்பு: மஞ்சுநாத் கோரிக்கை பெங்களூரு ரூரலில் கூடுதல் பாதுகாப்பு: மஞ்சுநாத் கோரிக்கை
பெங்களூரு ரூரலில் கூடுதல் பாதுகாப்பு: மஞ்சுநாத் கோரிக்கை
பெங்களூரு ரூரலில் கூடுதல் பாதுகாப்பு: மஞ்சுநாத் கோரிக்கை
பெங்களூரு ரூரலில் கூடுதல் பாதுகாப்பு: மஞ்சுநாத் கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2024 04:53 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, அசம்பாவிதம் நடக்காத வகையில் கடும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில தேர்தல் தலைமை அதிகாரி அலுவலகத்துக்கு, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் கடிதம் எழுதி உள்ளார்.
லோக்சபா தேர்தல் ஓட்டுகள் நாளை எண்ணப்படுகிறது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் கருத்து கணிப்புகளில் கர்நாடகாவில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும்; குறிப்பாக பெங்களூரு ரூரலில் பா.ஜ., வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மஞ்சுநாத் உட்பட பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் 'குஷி' அடைந்துள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கையின் போது எந்த அசம்பாவிதமும் நடக்காதபடி பார்த்து கொள்ள, மாநில தேர்தல் தலைமை அதிகாரி அலுவலகத்துக்கு, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையங்களில், கூடுதல் பாதுகாப்பு படையை அமைத்தல்
சட்டம் - ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க, கூடுதல் போலீஸ், பாரா மிலிட்டரை படையை அமைத்தல்
அத்துமீறி யாரும் உள்ளே நுழையாத வகையில், பாதுகாப்பு படையினர் நியமித்தல்
ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் செல்வோர் யாராக இருந்தாலும், முழுமையாக சோதனையிட்டு அனுப்ப வேண்டும்
அனுமதி அடையாள அட்டை உள்ள அதிகாரிகள், ஊடகத்தினரை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும், 'ஓட்டுப்பதிவு நாளன்று கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி' மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மஞ்சுநாத் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.