ADDED : ஜூன் 24, 2024 05:09 AM

பெங்களூரு : 'நடிகர் தர்ஷனை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திய, சுமலதா அம்பரிஷ் இப்போது மவுனமாக இருப்பது ஏன்,' என நடிகர் சேத்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
கடந்த 2019ன், சட்டசபை தேர்தலில் தன் அரசியல் லாபத்துக்காக, நடிகர் தர்ஷனின் செல்வாக்கை சுமலதா அம்பரிஷ் பயன்படுத்தினார். தர்ஷனை தன் மூத்த மகன் என, அழைத்தார். தன் மகனின் சமீபத்திய செயல்கள் குறித்து, சுமலதா மவுனமாகவும், தலைமறைவாகவும் இருப்பது ஏன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.