ADDED : ஜூன் 24, 2024 05:10 AM
சிக்கபல்லாபூர், : பாகேபள்ளியில் நேற்று காலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம் பாகேபள்ளியின், அகத்மடகா கிராமத்தில் நேற்று காலை 7:50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில், சமையல் அறைகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், வீடுகளில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.